Sunday, September 12, 2010

இன்றைக்குத் தமிழின் நிலை..

முதலில் ..இந்த blog-இல் அனைத்துமே எனது சொந்த கருத்துக்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு தமிழ் நாட்டில் தமிழின் நிலை என்னவாக இருக்கிறது?  சமீபத்தில், தமிழ்,  உலக "செம்மொழி " யாக்கபட்டதும், அதற்காக..தமிழக அரசின் சார்பாக ,"உலக செம்மொழி  மாநாடு " நடத்தப்பட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே ..இந்நேரத்தில்  இந்த கேள்வி (தமிழ்  நாட்டில்  தமிழின்  நிலை  என்ன ??)உங்கள்  மனதில்  ஒரு  சலசலப்பை  ஏற்படுத்தி இருக்கலாம் .ஆனால், உண்மையில் இது கவனிக்கபடவேண்டிய ஒரு விஷயமாகவே  இருக்கிறது. சமீபத்தில்,தமிழ்   நாட்டில் ஆயிரக்கணக்கான  பள்ளிகளில்  தமிழ்  ஆசிரியர்களே  "இல்லை "என்ற  செய்தியை  நான்  ஒரு வாரப்பத்திரிகையில் படிக்க நேர்ந்தது ..ஒரு வகையில் நான்  இந்த  blogai உருவாக்க அந்த செய்தியும்  ஒரு  காரணம்.தாய்  நாட்டில் தாய்மொழியை  கற்பிக்கவேஆசிரியர்கள்  இல்லை என்ற அவல நிலை,தமிழ்  நாட்டில்  இருப்பது  வேதனைக்குரியது .இத்தகைய நிலை  "ஏன் ?" என்று  கேட்டால் ..அதற்கு  பதில்  என்னவாக இருக்கும் ?தமிழ்  நாட்டில்  தமிழ்  கற்க -கற்ப்பிக்க  யாரும்  முன்வருவதில்லையா ?இப்படி ஒரு கல்விநிலையை  வைத்து  கொண்டு  அரசு  என்ன  செய்து  கொண்டிருக்கிறது?என்ற  கேள்விகளை  எல்லாம் தாண்டி  எனக்குள்  தோன்றியது  இதுதான் ..."தமிழை "மதிப்பவர்கள் " தமிழ்  நாட்டில்  குறைந்து  விட்டார்கள் ".தமிழ்  நாட்டின்  தலை  நகரமான  "சென்னை "யில்  தமிழ்  எங்கே  "வாழ்கிறது "?இங்கே  நான்  தமிழர்கள்  அனைவரையும்  சாடவில்லை  என்பதை  வாசகர்கள்  புரிந்துகொள்ளுதல்  அவசியம் .முதலில்  பிள்ளைகளுக்கு..தாய்  மொழியில்  கல்வி  அறிவை  புகட்டுவதை  பெற்றோர்கள் ,பெருமையாக  கருத  வேண்டாம் ,ஒரு  கடமையாக  கருதுங்கள்.தமிழ்  வழி  கல்வி  என்பதை விட்டுவிடுவோம் ..ஏனெனில்,பிள்ளைகள்  மேற்படிப்பு  தொடர்கையில்..ஆங்கில அறிவு  இல்லாமல்  இருந்தால்..அவர்களுக்குள்  ஒரு  தாழ்வு  மனப்பான்மை  ஏற்படலாம் ."தாழ்வு  மனப்பான்மை  ஏற்பட…தாய்  மொழி  ஏன்றுமே  ஒரு  காரணமாய்  இருக்ககூடாதல்லவா ??".எனக்குத்  தெரிந்து  பல  கல்லூரிகளில் பல  மாணவர்களுக்கு  தமிழ்  எழுத, படிக்கத் தெரிவதில்லை ..ஏன் இந்த நிலைமை?மாணவர்கள்  முதலில்  தமிழ்  மொழியை கற்பதை அவசியமாகக் கருத  வேண்டும் .மேலும் ,இவ்வாறு  கூறுவதால்  நான்  பிற  மொழிகளை  கற்கக்கூடாது  என்று  சொல்வதற்கில்லை ..எந்த  மொழியை பயின்றாலும் ,தாய்  மொழியை  கற்று  அதனை  பிழை  இல்லாமல்  பேசவும்  ஏழுதவும் கற்க  வேண்டுதல்  கட்டாயம் என்பதே என் கருத்து .பெற்றோர்களும்  ,மாணவர்களும் ,அரசும்  இதனை  சிந்திக்க  வேண்டும் ..சிந்திப்பார்களா ?!


தாய்த்தமிழின்  நிலையை  உயர்த்தி  நாமும்  உயர்ந்திடுவோம் ..நாட்டிற்கு  பெருமை  சேர்த்திடுவோம் !!
       நன்றி !!!